தொடரும் கும்பல் தாக்குதல்: கால்நடை திருடர்கள் என நினைத்து 2 பேர் அடித்துக்கொலை!

மேற்குவங்கத்தில் கால்நடை திருடர்கள் என நினைத்து 2 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 






பிரகாஷ் தாஸ், ரபியுல் இஸ்லாம் என்ற இருவரும் நேற்றைய தினம் ஒரு லோடு வேனில் 2 பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு கூச்பெகர் நகரத்தில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தனர்.


அப்போது, லோடு வேனில் மாடுகளை ஏற்றிச்செல்வதை பார்த்த கிராம மக்கள் அந்த வேனில் பதிவு எண் ஒட்டப்படாமல் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அவர்களது வாகனத்தை ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது. 


தொடர்ந்து, அவர்களிடமிருந்து மாடுகளை பறிமுதல் செய்த அந்த கும்பல், அது அவர்கள் பகுதியில் இருந்து சில நாட்களுக்கு முன்னால் திருடிச் செல்லப்பட்ட மாடுகள் என எண்ணியுள்ளனர். மேலும், இந்த மாடுகளை தற்போது கால்நடை வியாபாரிகளிடம் விற்க கொண்டு செல்வதாக அவர்கள் நினைத்துள்ளனர்.